ராஜபக்சேவை இந்தியாவிற்கு மீண்டும் அழைத்தால் லட்சம் பேர் திரளுவோம் –எச்சரிக்கை.

24.9.12

நாங்கள் எதிர்ப்பது புத்தரை அல்ல…புத்தன் பெயரில் உள்ள கொலைகாரனைத்தான்!” – சென்னை வந்த வைகோ அண்ணா சமாதி அருகே கூடியிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, இந்தியாவிற்கு மீண்டும் அழைத்தால், லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்,” என, வைகோ எச்சரிக்கை விடுத்தார்.ம.பி., மாநிலம் சாஞ்சியில் கடந்த, 21ம் தேதி நடந்த புத்த மத விழாவில் பங்கேற்க வந்த ராஜபக்ஷேவுக்கு கறுப்பு கொடி காட்டி சென்ற வைகோ கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். இன்று அவர் சென்னை திரும்பினார். தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:இனப் படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, மூன்று முறை, பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். இந்த நடவடிக்கை இனியும் தொடருமேயானால், ரயில், விமானம், பேருந்து என, லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ராஜபக்ஷேவுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்துவேன்.இவ்வாறு வைகோ பேசினார்

0 கருத்துக்கள் :