சோமாலியாவில் எம்.பி. சுட்டுக்கொலை

23.9.12

சோமாலியா நாட்டில் எம்.பியாக இருந்தவர், முஸ்தபா மாலிக். இவர் மசூதிக்கு சென்று தொழுகை நடத்தி விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் அப்போது மர்ம மனிதன் ஒருவன் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் அந்த இடத்திலேயே முஸ்தபா மாலிக் உயிர் இழந்தார். அவரை சுட்டவர் யார்? என்று தெரியவில்லை. சோமாலியா நாட்டில் அல் சபிப் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அவர்கள்தான் எம்.பியை சுட்டு கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த தீவரவாதிகள் அடிக்கடி சோமாலியாவில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த வியாழக்கிழமை அவர்கள் தலைநகரம் மகாதிசுவில் 2 இடங்களில் 2 வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 பேர் உயிர் இழந்தனர். சுட்டு கொல்லப்பட்ட முஸ்தபா மாலிக் சோமாலியா முன்னாள் அதிபர் ஷேக் அகமதுவின் மாமனார் ஆவார்.

0 கருத்துக்கள் :