சென்னையில் இரு தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! காட்சிகளை ரத்து

2.9.12


சென்னை மற்றும் தாம்பரத்தில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு நடந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த நாவலூர் ஏஜிஎஸ் தியேட்டருக்கு வந்த தொலைபேசியில் பேசிய மர்ம நபர், தியேட்டரில் குண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் தியேட்டரில் இருந்து அவசர அவசரமாக அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.

0 கருத்துக்கள் :