பிரபல நடிகையுடன் செக்ஸ் லீலை ;தலைவரின் பதவிகள் பறிப்பு

30.9.12

ஊழல், செக்ஸ் புகாரில் சிக்கிய சீன தலைவர் போ ஷிலாயின் பதவிகள் பறிக்கப்பட்டன. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தவர் போ ஷிலாய். சீனாவின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்து வந்த அவர் அடுத்த பிரதமராக வர வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் அவர் மீது அடுக்கடுக்காக ஊழல் புகார் கள் எழுந்தன. இங்கிலாந்து தொழிலதிபர் நெயில் என்பவரை கொலை செய்ததில் இவர் சம்பந்தப்பட் டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் ஒரு சீன பத்திரிகையில் பிரபல சீன நடிகை ஷாங் ஷியிக்கு அரசியல் செல்வாக்கு உள்ள தலைவர்களுடன் தொடர்பு உள்ளது என செய்தி வெளியானது. அவர் பல அரசியல் தலைவர்களுடன் பணத்துக்காக உறவு வைத்துக் கொண்டுள்ளார் என்ற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை ஷாங் ஷியி மறுத்தாலும் போவுக்கு அவருடன் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளி வந்தன. சீனாவில் மாசே துங் தலைமையிலான புரட்சியின் மூலம் மக்கள் சீன அரசு அமைக்கப்பட்டு 63 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்கான விழா இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் போ மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விட்டது. தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார். அவரை சீன பாராளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரசிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஒருவாரத்தில் அந்த பதவியிலிருந்தும் நீக்கப்படுவார். அவர் மீது விசா ரணை மேற்கொள்ளும் போது பதவியை காரணம் காட்டி தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

0 கருத்துக்கள் :