பூலித்தேவன் போன்றவர் பிரபாகரன் விவேகமற்ற வீரம் கோழைத்தனமாகும் ம.நடராஜன்

8.9.12


நெல்லை மாவட்டம் நெல்கட்டான்செவல் பாளையத்தை ஆண்டுவந்தவர் மன்னர் பூலித்தேவன். 1755களில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய மண்ணின் சுதந்திரத்திற்காக முதல் குரல் கொடுத்த மாமன்னன். இவரது பிறந்தநாள் விழாவை அந்த கிராமத்தில் அந்த மன்னனின் பெயரால் அறக்கட்டளை ஏற்படுத்தியவர் ம.நடராஜன்.

அதன் மூலம் அந்த மன்னனின் பிறந்தநாள் விழாவை வருடம்தோறும் செப்டம்பர் 8ஆம் தேதி நடத்துவது வழக்கம். அந்த விழாவிற்காக சினிமா பிரபலங்களையும் அழைத்து வருகிறார். இந்த வருடம் 8ஆம் தேதி நெல்கட்டான்செவல் கிராமத்தில் பூலித்தேவனின் 297வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்காக பழ.நெடுமாறன், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மருமகன் கல்காத்தாவைச் சேர்ந்த கிருஷ்ணமோகன் மற்றும் கார்கில் கேப்டன் கொல்கத்தாவைச் சேர்ந்த சக்கரவர்த்தி போன்றவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டி வந்தார்.அந்த கிராமத்தில் திரண்ட மக்களிடையே மன்னன் பூலித்தேவனின் சுதந்திர போராட்டத்தின் வீர வரலாறு பற்றி பேசினர். அவர்களில் நெடுமாறன் பேசும்போது, எந்த ஒரு இனம் விடுதலைக்காக போராடியதோ, அந்த இனம் தோற்றதாக இல்லை. அதைப்போன்று மன்னன் பூலித்தேவனும் இந்திய மண்ணின் விடுதலைக்காக முதன் முதலாக குரல் கொடுத்தவர். அதைப்போன்று ஈழத்தில் பிரபாகரன் தமிமிழனத்தின் விடுதலைக்காக போராடியவன். பிரபாகரன் தலைமையில் ஈழத்தில் மிகப்பெரிய விடுதலைப் போர் வெடிக்கும்.பிரணாப் முகர்ஜியின் மருமகன் கிருஷ்ண மோகன் பேசும்போது, மத்திய அரசாங்கம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஊழல்களால் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்த ஊழல் நிறைந்த மத்திய அரசு மாற்றப்பட வேண்டும் என்றார். மேலும் வேறு அரசு அமைய வேண்டும்.இறுதியாக ம.நடராஜன் பேசும்போது, தன் வீடு, தன் பிள்ளைகள் என்று இருக்க வேண்டும். சமூகம் வளர வேண்டும் என்று பூலித்தேவன் பெருமைகளை சொன்னவர், சாதிச் சண்டையால் மிகவும் பாதிக்கப்பட்டது தென்பகுதி. வடக்கே கல்வி பெருகியதால் அந்த மோதல் அங்கே இல்லை. எனவே உங்களது பிள்ளைகள், வாரிசுகளுக்கு கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உலக வரலாற்றில் தமிழனுக்கு ஒரு அடையாம் தந்தவர் பிரபாகரன். தமிழ் ஈழம் அமைவதற்கான வழிமுறைகளை நாங்கள் வெளியே தெரியாமல் செய்து வருகிறோம். விவேகமற்ற வீரம் கோழைத்தனமாகும் என்று பசும்போன் தேவர் சொன்ன வரிகளை அழுத்தமாக பேசினார்.

0 கருத்துக்கள் :