விபச்சாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் பிரதேசமாக சாந்தபுரம் ! சீரழியும் தமிழீழம்

30.9.12

படையினரதும், பொலிஸாரினதும் முழுமையான ஆசீர்வாதத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் விபச்சாரத்தில் கொடிகட்டிப்பறக்கும் பிரதேசமாக சாந்தபுரம் கிராமம் மாறியிருக்கின்ற நிலையில், சிங்களப் பெண்களும் தொழிலுக்காக வந்துபோகின்ற விடயம் அம்பலமாகியுள்ளது. கிளிநொச்சி நகரத்தை அண்டியிருக்கும் இந்தக்கிராமம், யுத்தத்தின் பின்னர் மிகமோசமான விபச்சாரம் மற்றும் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகளுக்கு பெயர்போன கிராமமாக மாறியிருக்கின்றது என்றால் பாருங்களேன். அண்மையில் 5 பிள்ளைகளின் தாய் படைச்சிப்பாயுடன் தென்னிலங்கைக்கு ஓடிச் சென்றிருந்தார். இந்நிலையில் தென்னிலங்கையில் படைச் சிப்பாயின் உறவினர்கள் குறித்த பெண்ணை வெட்டியதில் படுகாயமடைந்ததாக கிராமத்திற்குச் செய்தி வந்திருந்தது. இதன் பின்னர் வேறு தகவல்கள் எவையும் இதுவரையில் கிராமத்திற்குக் கிடைக்கவில்லை. இதேபோன்று இளவயது திருமணங்கள், திருமண விலக்குகள், கள்ள உறவுகள் என மோசமான சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன. இதேபோல் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பெண்கள் இக்கிராமத்திற்குள் வந்து தங்கியிருந்து விட்டுச் செல்கின்றனர். இவ்வாறானவர்கள் படையினரின் உறவினர்கள் என்ற போர்வையிலேயே கொண்டுவரப்படுகின்றனர். ஆனால் அவர்கள் விபச்சாரத்திலேயே ஈடுபடுகின்றனர் என்ற விடையம் அறியப்படுகிறது. குறிப்பாக மாவட்டத்தில் பல இளைஞர்களிடம் இவர்களின் தொலைபேசி இலக்கங்கள் உள்ளன. தொடர்பு கொண்டால் அடுத்த சில மணிநேரத்தில், சிங்களம், தமிழ் இரண்டிலும் பெண்களை பெறலாம் என பல இளைஞர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றனர்.

0 கருத்துக்கள் :