புலிகளால் நாட்டுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாம்! சொல்லும் இந்தியா

29.9.12

முள்ளிவாய்க்காலில் போர் நிறைவடைந்த போது அப்போதைய இலங்கை இராணுவத் தளபதியை அழைத்து புலிகளுடனான போர் வெற்றி கொள்ளப்பட்டதற்கு நன்றி தெரிவித்து இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் விருந்து கொடுத்தமை யாவரும் அறிந்த விடயமாகும். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக இந்தியா தற்போது மீண்டும் அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும் புலிகள் அச்சுறுத்தலாக அமைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. 1991ம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, 1992ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமிழகத்தில் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மாவோயிச தீவிரவாதிகளுடன் இணைந்து மீளவும் நடவடிக்கைளை தொடர முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. யுத்த ரீதியில் தோல்வியைத் தழுவிய போதிலும் சர்வதேச ரீதியில் பல்வேறு வழிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு கூறியுள்ளது.

0 கருத்துக்கள் :