யாழில் புத்தூர் பகுதியில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படத்திய இளைஞன் கைது

28.9.12

யாழ்.புத்தூர் பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் சிறிக்குகநேசன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சிறுமியை சிறுவர் நன்னடத்தைப் பரிவில் சேர்க்குமாறு அச்சுவேலிப் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :