தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் விடுக்கும் அறிவித்தல்

30.9.12

பெருமதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் பெற்றோர்களே, சகோதரர்களே, உறவுகளே! அன்புடன் வணக்கம். உயிரிலும் உயர்வான தமிழீழத்தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து தமிழர் எம் வரலாற்றில் கருவாகி நிற்கும் உத்தமர்களின் நினைவு சுமந்து, அந்தக் கல்லறைத் தெய்வங்களுக்கு மாலைசாத்தி, மலர்Àவி, சுடர்ஏற்றி விடியலுக்காய் வரம்கேட்கும் புனிதநாளாம் தேசிய மாவீரர் நாள் 'நவம்பர் 27' இவ்வாண்டும் அதற்கே உரிய தனித்துவத்துடன் அனைத்துலகெங்கும் பரந்து வாழும் தமிழீழதேச மக்களாலும், தமிழின உணர்வாளர்களாலும் நினைவுகூரப்படவுள்ளது. அந்தவகையில், தமிழீழ விடுதலைப்புலிகள் - சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் வழமை போல் Forum Fribourg மண்டபத்தில் 27.11.2012 செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிக்கு நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2012 நினைவெழுச்சி நாளில் தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் தன் பணியை ஆற்றுவதற்காக மாவீரர் குடும்ப உறவுகளாகிய தங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். அதற்கமைவாக கடந்த காலங்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களை எமக்கு இதுவரை அனுப்பி வைக்காதவர்களும், தங்களால் கடந்த காலங்களில் விபரங்கள் தரப்பட்டபோதும் எமது உரிய தொடர்புகள் மேற்கொள்ளப்படாதிருப்பின் தயவு செய்து உங்களுடனான மாவீரர் குடும்ப உறவுத் தொடர்பை பேணுவதற்கு விபரங்களை 31.10.2012 இற்கு முன்னர் தந்துதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: Tamilar Remembrance Foundation – Swiss, Postfach 439, 4528 Zuchwil. 076 426 27 80 076 528 71 12 078 662 93 06 நன்றி

0 கருத்துக்கள் :