யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகள் அதிகரிப்பு

25.9.12

யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வருடாந்தம் சுமார் ஐயாயிரம் புற்று நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகாமையில் 260 மில்லியன் ரூபா செலவில் புற்று நோய் வைத்திசாலையொன்று அமைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாண புற்று நோயாளிகள் தற்போது மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மஹரகமவிற்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இலங்கையில் வருடாந்தம் 20, 000 பேர் புற்று நோயினால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :