தாயையும் பிள்ளையையும் கடத்திய தம்பதியர்

2.9.12

யாழில் தாயையும் அவரது இரண்டு வயதுப் பிள்ளையையும் கடத்திய தம்பதியரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் வீதியில் வாழும் இரண்டு குடும்பங்களுக்கிடையே இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களைத் தொடர்ந்து ஒரு குடும்பம் மற்றைய குடும்பத்திற்கு 80 ஆயிரம் ரூபா பணத்தை கொடுக்கவேண்டியிருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பணம் உரியவர்களால் கேட்கப்பட்ட போது மற்றைய குடும்பத்தினரால் அப்பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த தம்பதியினர் தாயும், பிள்ளையும் தனிமையாக வீட்டில் இருந்த வேளையில் தந்திரமாக அவர்களைக் கடத்திச்சென்று மறைத்து வைத்துள்ளனர்.

வீட்டுக்கு வந்த கணவன் மனைவி மற்றும் பிள்ளையை வீட்டில் காணாததைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடத்தப்பட்ட தாயும் பிள்ளையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் தற்போது விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :