பிரபாகரன் புத்திசாலி: சிங்களப் பெண் பி.பி.சிக்கு வாக்குமுலம். – (வீடியோ இணைப்பு)

13.9.12

முல்லைத்தீவு மாவட்டமே, இலங்கையில் தற்போது படு பிசியாக இருப்பதாக பி.பி.சி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. காரணம் என்னவென்று கேட்கிறீர்களா ? பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் முல்லைத்தீவை நோக்கி படை எடுப்பதே அதன் காரணமாகும். முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் பல விடுதிகள், தேனீர்க் கடைகள் புதிதாக முளைத்துள்ளன. இவை அனைத்துமே தென்னிலங்கையில் இருந்துவரும் சிங்கள மக்களை குறிவைத்தே நடத்தப்படுகிறது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்கு வருகிறார்களோ என்னமோ…ஆனால் சிங்கள மக்கள் பலர் புதுக்குடியிருப்புக்குச் சென்று பார்பதில் படு ஆர்வம்காட்டி வருகிறார்கள் என்கிறது BBC தொலைக்காட்சி. ஆம பாஸ் ரக் என்னும் நிகழ்சிக்காக பி.பி.சி தொலைக்காட்சியானது 7 நிமிட ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதற்கு போர் சுற்றுலா என்று பெயரிட்டுள்ளார்கள்.


தேசிய தலைவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு மறைவிடத்தைக் காட்டும் இராணுவத்தினர், அது 4 மாடி ஆழமானது என்கிறார்கள். இதனைப் பார்வையிடுவதற்கும், மற்றும் முல்லைத்தீவு கடலைப் பார்ப்பதற்குமே சிங்கள மக்கள் அலையலையாக வந்துசெல்கிறார்கள். சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர் பலகையை மட்டுமே அங்கே காணக்கூடியதாக உள்ளதாக, பி.பி.சி நிருபர் தெரிவிக்கிறார். இதன்மூலமாக சிங்களவர்கள் ஒரு செய்தியை தமிழ் மக்களுக்கு உணர்த்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அது என்னவென்றால் இது உங்கள் நாடு அல்ல என்ற செய்தியாகும் ! முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்புக்கு அருகாமையில் வசிக்கும் தமிழ் பள்ளிச் சிறுவர்கள் மற்றும் சிறுமியரை அழைத்துவரும் இராணுவத்தினர், தாம் புலிகளை எவ்வாறு வெற்றிகொண்டோம் என சரளமாகத் தமிழில் பேசி விளங்கவைக்கின்றனர்.

போர் சுற்றிலாத் தலமாக மாறியுள்ள முல்லைத்தீவையும் புதுக்குடியிருப்பையும், சிங்கள மக்கள் மட்டும் பார்க்க வருவது இல்லை. பல தமிழர்களும் வந்து பார்த்துச் செல்கிறார்கள். தற்போது இராணுவத்தினருக்கு முக்கிய வருவாய் ஈட்டித் தரும் ஒரே விடையம் என்னவென்றால், இந்தப் போர் சுற்றுலாத் தலமாகும். இவ்விடத்திற்கு வருகைதரும் சிங்கள மற்றும் தமிழ் சுற்றுலாப் பயணிகளிடம் பி.பி.சி நிருபர் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். இதில் சிங்களப் பெண் ஒருவர் பதில்கூறும்போது, விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தையும் அவர்கள் திறமையையும் பார்த்து நான் வியக்கிறேன் என்றார். அதுமட்டுமல்லாது புலிகளின் தலைவர் பிரபாகரன் மிகவும் புத்திசாதூரியமானவர். அவரை மெச்சவேண்டும். ஆனால் நாட்டை ஆக்கபூர்வமான பாதையில் அவர் கொண்டுசெல்லவில்லை எனக் கூறினார்.

இதேவேளை வந்திருந்த வெளிநாட்டுத் தமிழர்கள் சிலரையும் பி.பி.சி நிருபர் கேள்விகள் கேட்டுள்ளர். இதற்கு பதிலளித்த இளைஞர் ஒருவர், இங்கே காணப்படும் பெயர் பலகைகளை வைத்துப் பார்த்தால் தமிழர்கள் மிகவும் பாவம் என எண்ணத்தோன்றுகின்றது என்று கூறினார். ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்த தமிழர் ஒருவர், ஆமி தங்களுடன் சேர்ந்து நின்று படம் எடுத்ததாகவும், ஆமிக்காரர் மிகவும் நல்லாகப் பழகுவதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறு இருந்தாலும், தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழில் எழுதாது, சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் பெயர்பலகையை எழுதுவது, மீண்டும் ஒரு போராட்டத்துக்கு வழிசமைத்துவிடுமோ என்ற அச்சம் இருப்பதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். இங்கே ஒரு விடையத்தைக் கவனித்தீர்களா ? தென்னிலங்கைச் சிங்களவர்கள் தேசியதலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை பார்த்துவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால் தமிழர்களோ ஆமி நல்லா தமிழ் கதைக்கினம் என்று சொல்லி ஆறுதல் அடைகிறார்கள்… அவ்வளவுதான் !

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உங்கள் பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)