அவுஸ்திரேலியாவுக்கு தமிழர்களை கடத்திய குழுவின் தலைவர் கைது

12.9.12


அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையர்களை சட்டவிரோத அகதிகளாக அழைத்துச்செல்லும் கடத்தல் தலைவர் என்று கூறப்படும் டோனி என்பவர் மலேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கைதுசெய்யப்பட்டார் . இந்தநிலையில் அவர் இலங்கை அகதிகளிடம் இருந்து 40 மில்லியன் டொலர்களை சேகரித்துள்ளதாக நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட அவர் ஏனைய ஆட்கடத்தல்காரர்களுடன் தற்போது கோலாலம்பூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள கடத்தல்காரர்கள் மலேசியாவில் இருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல சுமார் 300 மில்லியன் டொலர்களை அகதிகளிடம் இருந்து சேகரித்துள்ளதாகவும் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை, ஈராக், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சீனா போன்ற நாடுகளின் அகதிகளுக்கு மலேசியா இடைத்தளமாக கருதப்படுகிறது

இந்தநிலையில் அகதிகளை மலேசியாவுக்கு அழைத்து வந்து பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துசெல்ல சுமார் 18 வாரங்கள் எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துக்கள் :