யாழ். புகையிரத நிலையப் பகுதியில் குண்டு வெடிப்பு; மறுக்கும் இராணுவம்,

25.9.12

யாழ். புகையிரதத்திற்கு பின்புறமாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றறுள்ளது. புகையிரத நிலையத்துக்கு பின்புறமாக உள்ள பற்றைக்குள் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தை அடுத்து அவ்விடத்திற்கு இராணவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் சென்று பார்வையிட்டதாகவும் வெடிப்பு இடம்பெற்ற பகுதியை இராணுவத்தினர் மண் போட்டு மூடிச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும் இவ்வாறானதொரு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் இது தொடர்பில் எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை எனவும் பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பு குறிப்பிடுகின்றது.

0 கருத்துக்கள் :