தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணை நிபுணர் ஒருவர் இந்தியாவில் கைது.

11.9.12


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான ஏவுகணை நிபுணர் ஒருவர் இந்தியாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மறியலில் போடப்பட்டு உள்ளார்.

இவரின் பெயர் தவராசா. வயது 46.

இவர் வெடிபொருட்கள், எறிகணைகள், ஏவுகணைகள் ஆகியவற்றில் கையாள்கின்றமையில் மகாநிபுணர் என்று பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக அனுப்ப முயன்றார் என்று இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

இவரைப் போலவே மேற்படி ஆட்கடத்தலில் ஈடுபட்ட இன்னும் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் இவர்களில் ஒருவர் மாத்திரம் இந்தியர் என்றும் மங்களூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :