சிங்களவர்கள் விரட்டியடிப்பு! : திருச்சி காட்டூரில் பரபரப்பு

4.9.12


வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்துகொள்ள வந்த இலங்கை சிங்கள மக்கள் பயணித்த பஸ் மீது செருப்படி மற்றும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது:

வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்து கொள்ள வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு எதிராக மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்களை சுமார் 5 பேருந்துகளில் போலிஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வர திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை திருவாரூர் அருகே சிங்கள மக்கள் வந்த பேருந்து மீது செருப்பு வீச்சு நடத்தப்பட்டது.

அதைத் தாண்டி பேருந்து இன்று மதியம் திருச்சி – தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூர் அருகே, சிங்கள மக்கள் வந்த பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி ஆகியவை உடைக்கப்பட்டன.

எனவே, சிங்களவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் அருகில் இருந்த கல்யாண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

பிறகு நிலைமை சற்று சீரடைந்ததும் மிகுந்த பாதுகாப்புடன் அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

0 கருத்துக்கள் :