சிறப்புமுகாமில் உண்ணாவிரதமிருந்த செந்தூரன் கைது

1.9.12


தமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரன் என்ற ஈழத்தமிழ் இளைஞரை, தற்கொலை முயற்சி வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

பூந்தமல்லியில் சிறிலங்கா அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது கியூ பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து, அவர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றம் செய்யக் கோரி கடந்த மாதம் 6ம் நாள் தொடக்கம் செந்தூரன் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இவர்களுக்கு ஆதரவாக மதிமுக தலைமையகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் இவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், செந்தூரன் மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி காவல்துறையினர், நேற்றிரவு 10 மணியளவில் அவரைக் கைது செய்தனர்.

பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட செந்தூரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

0 கருத்துக்கள் :