இலங்கையில் இரண்டரை வருடங்களுள் 9412 பேர் தற்கொலை!

14.9.12


நாட்டில் பல காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வோரின் தொகை அதிகரித்துச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையின்படி தற்கொலைகள் தொடர்பான விபரம் வருமாறு:

ஆண்டு——————ஆண்——-பெண்——மொத்தம்
2010————————–2914———950———–3864
2011————————–2939———831———–3770
2012-06-30 வரை—–1381———397———–1778

மேற்கூறிய தகவல்களின்படி ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மூன்று வருடங்களில் இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்வர்களே அதிகம் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர்.

40 தொடக்கம் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2011ம் ஆண்டில் 16 வயதிற்கும் குறைந்த 41 ஆண் சிறுவர்களும் 77 சிறுமியர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குடும்பப் பிரச்சினை, காதல், தொழில் பிரச்சினை, மன உலைச்சல் உள்ளிட்ட காரணங்கள் அதிக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :