நாளொன்றுக்கு 300 விவாகரத்து சம்பவங்கள்

23.9.12

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 300 விவாகரத்துகள் இடம்பெறுவதாக மேல்மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. திருமண பந்தத்தில் இணையும் இருவருக்கிடையில் ஏற்படும் புரிந்துணர்வற்ற தன்மையே விவாகரத்துகள் அதிகரிப்பதற்குக் காரணம் ௭னவும் அந்த ஆய்வின் போது தெரியவந்துள்ளது. திருமணமாகி ஒரு வருடத்துக்குள் பெரும்பாலான விவாகரத்துகள் இடம்பெறுவதாகவும் 18 வயதுக்குக் குறைந்த தாய்மார் 3, 892 பேர் இலங்கையில் இருப்பதாகவும் மேல் மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் அனுஷா கோகில பெர்னாண்டோ தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :