இன்று 11 ஆண்டுகள்: உலகை அதிர வைத்த, அமெரிக்கா மீதான, செப்.11 தாக்குதல்

11.9.12


உலகையே அதிர வைத்த, அமெரிக்கா மீதான 9/11 அல்லது, செப்.11 தாக்குதல் நடந்து, இன்றுடன் 11 ஆண்டுகள். 2011-ம் ஆண்டு செப்டெம்பர் 11-ம் தேதி நடைபெற்ற 4 தற்கொலை விமான தாக்குதல்கள் அவை.

அது ஒரு செவ்வாய்க்கிழமை. அன்று காலை நியூயார்க் நகரம், மற்றும் வாஷிங்டனில் 19 அல்-காய்தா உறுப்பினர்கள், தற்கொலை தாக்குதல்களுக்கு தயாரானார்கள். பயணிகள் விமானங்களை கடத்தி, அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் மோதுவதே அவர்களது திட்டம் குறிப்பிட்ட 4 விமானங்களிலும், அவர்கள் பயணம் செய்வதற்காக டிக்கெட்டுகள் எடுத்திருந்தார்கள். இந்த 4 விமானங்களும், யுனைடட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

தீவிரவாதிகளின் திட்டம் என்ன?

இரு விமானங்களை, உலக வர்த்தக மையத்தின் இரு டவர்களிலும் கொண்டுபோய் மோதுவது, மூன்றாவது விமானம் பென்டகனை தாக்குவது, நான்காவது விமானம் வாஷிங்டனில் உள்ள கேபிடொல் பில்டிங்கை குறிவைக்கப்பட்டது.
இவர்கள் டிக்கெட் எடுத்திருந்த 4 விமானங்களில் இரண்டு, போயிங் 757 ரக விமானங்கள். மற்றைய இரண்டும், போயிங் 767 ரக விமானங்கள். பாஸ்டன், நியூ ஜெர்சி, வாஷிங்டன் ஆகிய இடங்களில் இருந்து, கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்னிஸ்கோ அல்லது லாஸ் ஏன்ஜெலஸ் செல்லும் விமானங்களாக இவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

தீவிரவாதிகள் நன்கு திட்டமிட்டே இந்த விமானங்களை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்கள் வைட்-பாடி ரக விமானங்கள். நான்-ஸ்டாப்பாக சுமார் 5 மணி நேரம் பறக்க வேண்டிய விமானங்கள். எனவே அவற்றில் அதிகளவில் எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். அதனால், விமானம் தமது இலக்குகளில் மோதும்போது கண்டிப்பாக வெடித்து எரியும். இதுதான், குறிப்பிட்ட இந்த 4 விமானங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், தடம் இலக்கம் 11, பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் இருந்து காலை 7.59க்கு புறப்பட்டது. இது போய்ச் சேரவேண்டிய இடம், லாஸ் ஏன்ஜெலஸ். மொத்தம் 76 பயணிகள் (5 தீவிரவாதிகள் தவிர்ந்த), மற்றும் 11 விமான சிப்பந்திகளுடன் புறப்பட்ட இந்த விமானம், உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவரில் 8.46க்கு மோதியது.
அந்த விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களின்பின், யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் தடம் இலக்கம் 175, அதே பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் இருந்து காலை 8.14க்கு புறப்பட்டது. இதில் 5 தீவிரவாதிகள் தவிர்ந்த 51 பயணிகள் மற்றும் 9 சிப்பந்திகள் இருந்தனர். இந்த விமானம், உலக வர்த்தக மையத்தின் தெற்கு டவரில் 9.03க்கு மோதியது.முன்றாவது, யுனைட்டட் ஏர்லைன்ஸின் தடம் இலக்கம் 77 விமானம், வாஷிங்டனின் டுல்லஸ் (டல்லஸ் அல்ல) விமான நிலையத்தில் இருந்து காலை 8.20க்கு புறப்பட்டது. மொத்தம் 5 தீவிரவாதிகள் தவிர்ந்த 53 பயணிகள், மற்றும் 6 விமான சிப்பந்திகளுடன் புறப்பட்ட இந்த விமானம், பென்டகனில் காலை 9.37க்கு மோதியது.நான்காவது, யுனைட்டட் ஏர்லைன்ஸின் தடம் இலக்கம் 93 விமானம், நியூ ஜெர்சி நுவார்க் ஏர்போர்ட்டில் இருந்து காலை 8.42க்கு புறப்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் மட்டுமே இருந்தனர். (மற்றைய 3 விமானங்களிலும் தலா 5 தீவிரவாதிகள் இருந்தனர்) ஏழு சிப்பந்திகளும், 33 பயணிகளும் மட்டுமே பயணம் செய்த இந்த விமானம்தான், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் போய் மோதியிருக்க வேண்டும்.ஆனால் அப்படி நடக்கவில்லை. விமானம் கடத்தப்பட்டதும், அதிலிருந்த பயணிகள் தீவிரவாதிகளுடன் மோதத் துவங்கினர். அந்த மோதல்கள் காரணமாக, தீவிரவாதிகளால் தமது இலக்கை அடைய முடியவில்லை. விமானம் பாதி வழியில் வெட்டவெளி ஒன்றில் காலை 10.03க்கு வீழ்ந்தது.தாக்குதல்கள் நடைபெற்றவுடன், விபரம் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷூக்கு சொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோவை கீழே பாருங்கள். 2011-ம் ஆண்டு செப்டெம்பர் 11-ம் தேதி இந்த தாக்குதல்கள் நடந்தபின், அக்டோபர் 5-ம் தேதி பின்-லேடன் இந்த தாக்குதல்களை தாம் செய்ததாக ஒப்புக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துக்கள் :