சிரியாவில் உக்கிரபோர்..100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

4.9.12


சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே உச்ச கட்ட போர் நடந்து வருகிறது. தீவிரவாதிகள் பிடியில் உள்ள அலெப்போ பகுதியில் நேற்று அரசுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் கட்டிடத்திற்குள் இருந்த 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் சண்டைக்கு 100 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தீவிரமாக நடைபெற்று வரும் இந்த சண்டையை நிறுத்துவது முடியாத காரியம் என்று சிரியாவிற்காக நியமிக்கப்பட்டுள்ள பன்னாட்டு தூதர் லக்தர் ப்ரஹிமி கூறினார்.

இருதரப்பு தாக்குதலில் அவதியுறும் பொதுமக்களுக்கு உதவ செஞ்சிலுவை இயக்கத்தினர் அங்கு சென்றுள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தெருக்களில் நின்று தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :