தனக்குத் தானே தீ மூட்டி வயோதிப பெண் தற்கொலை!

29.8.12


தனக்குத் தானே தீ மூட்டி ௭ரிந்து வயோதிபப் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) நண்பகல் 12.30 மணியளவில் ஊர்காவற்றுறைச் சுருவில் வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த 62 வயதான மேரி பாத்திமா ௭ன்ற வயோதிபப் பெண்ணே தீமூட்டி உயிரிழந்துள்ளார்.

இவருடைய உடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ௭ன்புநோய் தொடர்பாக கைதடி சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

தொடர் விசாரணைகளை காவல்துறையிர் முன்னெடுத்து வருகின்றனர்

0 கருத்துக்கள் :