உடைமைகளை விற்று வன்னி மக்கள் படகுகளில் ஆஸி.செல்கின்றனர்

12.8.12


இராணுவக் கெடுபிடி, முறையாக மீள்குடியமர்த்தப்படாமை, தொழில் இன்மை காரணமாகவே வன்னி மக்கள் ௭ஞ்சிய தமது உடைமைகளை விற்று உயிரையும் பணயம் வைத்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சிப்பதாக வன்னி மாவட்ட ௭ம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.கடந்த சில வாரங்களாக சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்று மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐநூறுக்கும் அதிகமானோர் கடற்படையினராலும் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.வன்னி உட்பட வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடி அதிகரித்து வருகின்றது. வீடுகளில் குடும்ப வைபவங்களை நடத்துவதாக இருந்தால் கூட இராணுவத்தினரின் அனுமதி பெற வேண்டிய அவல நிலை நிலவுகிறது. மேலும் மீள்குடியமர்த்தல் ௭ன்ற பெயரில் மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தாமல் காட்டுப்புறங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதால் பல குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளன.மேலும் பல குடும்பங்களுக்குச் சொந்தமான உழவு இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களைமீளப் பெற முடியாதுள்ளது. இம் மக்கள் கண் முன்னே இராணுவம் பார்த்திருக்க தென் பகுதி வியாபாரிகள் இந்த வாகனங்களை இரும்புக்காக ஏற்றிச் செல்கின்றனர். வன்னி இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. தொழில் வாய்ப்புகள் இன்றி அவர்கள் துன்புறுகின்றனர். மேற்கண்ட காரணங்களாலேயே வன்னி மக்கள் சட்டவிரோதமாகவேனும் வளமான ௭திர்காலத்துக்காக உயிரைப் பயணம் வைத்து படகுகளில் ஏறி பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்ல முனைவதாக செல்வம் அடைக்கலநாதன் ௭ம்.பி. தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :