முல்லைத்தீவு விசுவமடுவில் உந்துருளி விபத்தில் சிறுவன் பலி!

24.8.12


முல்லைத்தீவு விசுவமடு மூங்கிலாறு பகுதியில் பேருந்து உந்துருளி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.

முல்லைத்தீவில் இருந்து யாழ் நோக்கி சென்ற பேருந்தும் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக் கொண்டதில் உந்துருளியில் பின்னால் இருந்தசிறுவன் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 11 வயதான சிவலோகேஸ்வரன் பிரதீபன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது
உந்துருளியினை ஓட்டிசென்றவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மக்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :