அதிகாரிகள் செக்ஸ் பார்ட்டி : அதிர்ச்சியில் சீன அரசு

17.8.12


கம்யூனிச கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் சீனாவில் சமீப காலமாக அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்கள் அதிகரித்து வருகின்றனர்.

இப்போது, மூத்த அதிகாரிகள் 3 பேர், லுஜியாங் கவுன்டியில் செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்டு நிர்வாணமாக 2 அழகிகளுடன் இருந்த போட்டோக்கள் இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுக்கு எதிரான மற்றும் ஆபாச வெப்சைட்டுகளை அரசு தடை செய்து வருகிறது. பல வெப்சைட்டுகள் அதிரடியாக நீக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் இணைய தளத்தில் ஊடுருவி சிலர் ஆபாச காட்சிகளை வெளியிடுவது எப்படி என்று அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் மூத்த அதிகாரிகளின் நிர்வாண காட்சிகளை லட்சக்கணக்கானோர் பார்த்து டவுண்லோடு செய்து பரப்பி உள்ளனர். அந்த போட்டோக்களை பார்த்து பலர் விமர்சனம் செய்துள் ளனர். இதனால் சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :