ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுத்த ஜெயலலிதா!

15.8.12


இலங்கையில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

நம் உறவுகளாகிய, இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும், சிங்களவர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்தத் தருணத்தில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னையில் திமுக சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர் மாநாடு நடத்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,

ஜெயலலிதாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நம்பாதிங்கா

நல்ல பயனுள்ள தகவல்


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)