பாலியல் தொழில் இடம்பெற்ற நடிகைக்குரிய விடுதி முற்றுகை

24.8.12


திரைப்பட நடிகையொருவருக்குச் சொந்தமான மொரட்டுவ, சாகர வீதியிலுள்ள விடுதியொன்றை பாணந்துறை, வலான மோசடி தடுப்புப் பிரிவினர் நேற்று (23) முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்ததாக இரண்டு பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியொருவரே இந்த விடுதியின் முகாமையாளராக பணியாற்றுகிறார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மொரட்டுவ நீதிமன்றில் பெற்றப்பட்ட அனுமதிக்கமைய இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் 21 வயதுடைய முஸ்லிம் பெண் எனவும், இவர் கைதுசெய்யப்படும் போது ஒன்றரை வயது குழந்தையொன்றையும் அந்த விடுதியில் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மற்றையவர் 30 வயதுடைய தமிழ் பெண் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :