சொகுசு பஸ்சில் உல்லாசம்: நடிகைகள் உள்பட அழகிகள் சிக்கினர்

15.8.12


சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகே சர்தார் படேல் ரோட்டில் சொகுசு பஸ்சில் இளம்பெண்கள் பலர் அமர்ந்திருப்பதாகவும், அவர்களுடன் ஒரு கும்பல் பஸ்சுக்குள் வைத்தே பாடம் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சீனிவாஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட பஸ்சை சுற்றி வளைத்தனர்.அப்போது பஸ்சில் இருந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக புரோக்கர்கள் கட்டாயப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.இவர்களில் ஆவடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, திருவான்மியூரைச் சேர்ந்த சாய்சாது, பூந்தமல்லியைச் சேர்ந்த கற்பகம், ஸ்டெல்லா மற்றும் 7 பெண் புரோக்கர்கள் இருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்ட 23 பெண்களையும் விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தது தெரியவந்தது.அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 23 பெண்களையும், பல்வேறு இடங்களில் இருந்து விபசார கும்பல் அழைத்து வந்துள்ளனர். 23 பேரில் 3 பெண்கள் மட்டும் ஐதராபாத், பெங்களூர் மற்றும் புதுவையைச் சேர்ந்தவர்கள்.ஒரு பெண் சேலத்தை சேர்ந்தவர். இவருக்கு 16 வயதே ஆகிறது. சென்னையில் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வரும் இவரையும் விபசாரத்தில் தள்ளுவதற்காக ஏமாற்றி அழைத்து வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட பெண்களில் 6 பேர் துணை நடிகைகள். இவர்கள் வடபழனி, போரூர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள். கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகில் வந்ததும் பஸ்சை ஓரமாக நிறுத்திய விபசார புரோக்கர்கள், நாம் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டுக்கு செல்கிறோம். அங்கு வெளிநாட்டினர் பலர் தங்கியுள்ளனர். அவர்கள் முன்பு நடனம் ஆடுவதுடன், அவர்கள் இஷ்டப்படி நீங்கள் நடந்து கொண்டால் 3 நாட்களில் ரூ.90 ஆயிரம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர்.இதைக் கேட்டு பெரும்பாலானோர் அதிர்ச்சியடைந்து அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த புரோக்கர்கள் அடம் பிடித்த பெண்களை மிரட்டியுள்ளனர். எங்கள் பேச்சை கேட்காவிட்டால்... உங்களைப்பற்றி வெளியில் அவதூறு பரப்புவோம் என்றும் கூறியுள்ளனர்.இந்த நேரத்தில்தான் போலீசார் அங்கு சென்று, பஸ்சை சுற்றி வளைத்துள்ளனர். கைதான புரோக்கர்கள் அனைவரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 23 பெண்களும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.போலீசில் சிக்கிய புரோக்கர்களிடம் விசாரண நடத்தியபோது, பண்ணை வீட்டு விருந்துக்கு ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அவரிடம் 23 பெண்களையும் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தோம் என்று கூறியுள்ளனர். இதன் பின்னணி பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துக்கள் :