தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்: இ.ஜ.க. கோரிக்கை

21.8.12


இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடந்த 18–ந் தேதி வேதாரண்யத்தில் இருந்து கடலில் 5 பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 18 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், அதற்கு இந்திய அரசு சம்பிராயமாக கண்டனம் தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்தும் வகையில் பிரதமர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய எல்லைப் பகுதிக்குள் பாதுகாப்பாக மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :