சரத் பொன்சேகா- இந்திய தூதுவர் இரகசிய சந்திப்பு

21.8.12


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இலங்கையிலுள்ள இந்திய உயர் தூதுரகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.இந்தச் சந்திப்பு கடந்த 17 ம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்திலேயே இடம்பெற்றுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படுவது அதற்குத் தேவையான நிதி உதவிகளை வழ்குதல் தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்தச் சந்திப்பின் பின்னர் தென்பகுதியிலுள்ள தனது பிறப்பிடமான அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய சரத் பொன்சேகா, வலுவான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்கி அதன் ஊடாக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து மஹிந்த அரசினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

இப்போதைய பொம்மை வீர்ர்களிடமிருந்து இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, இதற்காகச் சிறை செல்லவும் தயார் எனவும் சூளுரைத்துள்ளார்.

0 கருத்துக்கள் :