க.பொ.த உயர்தர பரீ்ட்சையில் !பிரபாகரன் தீவிரவாதி! கேள்வியால் பரபரப்பு.

28.8.12


யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் “பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?” என்பதாகும்.

அதற்கு 5 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவையாவன-

1. பின்லேடன்
2. பிரபாகரன்
3. சதாம் உசைன்
4. கேணல் கடாபி
5. மாவோ சேதுங்

என்பதாகும். இவற்றிற்கு சரியான விடை 5. மாவோ சேதுங் என்பதாகும். அப்படியென்றால் பிரபாகரன்?

இதை விட முக்கிய விடயம் இந்த வினாத்தாளை தயார் செய்ததும் தமிழர்கள் தான்!

யாரை திருப்திபடுத்த இவ்வாறான வினாக்கள் வினாத்தாளில் இடம்பெற்றன…?

அரசையா? அல்லது மாணவர்களையா?

ஏன் சிங்களத்தில் ஜே.வி.பி யினர் கலவரங்களை நடத்தினர் அவர்களின் தலைவரின் பெயரை போட்டிருக்கலாம் அல்லவா? அதை விடுத்து பின்னர் ஏன் இப்படி?

இதனால் தமிழ் மாணவர் மத்தியில் இவர்கள் சொல்லமுனைவது என்ன? பிரபாகரன் பயங்கரவாதி என்றா?

தமிழர்களின் தலைவராக விளங்கும் பிரபாகரனை இவ்வாறு இழிவு படுத்தி வெளிப்படுத்தியமையானது உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கும் தொண்டமனாறு வெளிக்கள நிலையம் இப்படியான அவதூறு பரப்பும் வினாத்தாளை உருவாக்கியமைக்காக உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருமா?

எது எவ்வாறெனினும் இந்த வினாத்தாளை தயார் செய்தவருக்கு இந்நேரம் அலரிமாளிகையில் மஹிந்தரின் கையால் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம்…


0 கருத்துக்கள் :