போர்க் குற்றச்சாட்டில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதி!கனடா அதிரடி

29.8.12


குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே கனடாவின் நிலைப்பாடு என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தேசிய செயற்திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சரியான செயற் திட்டங்களை உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதாகவும் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே கனடாவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையிலான நம்பகமான உள்நாட்டு பொறிமுறைமையொன்றை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூர நோக்குடன் செயற்படுவதன் மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்.

அடிப்படை சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் தொடர்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :