ஓடும் ரயிலில் வாலிபர் தலை துண்டித்து கொலை

28.8.12


மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா போன்ற பரபரப்பான நகரங்களில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் சமீத்தில் அதிகரித்துள்ளன. அரசியல் கொலைகளுக்கும் பஞ்சமில்லை.

மூன்று தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் உள்ளூர் தலைவர் கொல்லப் பட்டார். இந்த கொலையை செய்தது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவ ர்கள்தான் என்று கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டினர்.

நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, உலகிலேயே சிறந்த மாநிலமாக மேற்கு வங்காளம் மாறி வருகிறது. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக யாரும் வீண்பழி சுமத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். அவர் அப்படி பேசிய மறுநாளே ஓடும் ரயிலில் கொலை நடந்துள்ளது.

கொல்கத்தா நோக்கி வந்த பயணிகள் ரெயில் ஒன்று முர்ஷதாபாத் மாவட்ட ரெயில் நிலையம் ஒன்றில் நின்று கிளம்பியது.

அந்த ரெயில் நிலையத்தில் பயணிகளுடன் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றும் ஏறியது. யாரையோ குறி வைத்து அவர்கள் ரெயிலில் எறினர். அவர்களை பார்த்த தும் அந்த பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் தப்பிக்க மற்றொரு பெட்டிக்கு ஓடினார்.

ரெயில் வேகம் எடுத்து விட்டதால் அந்த வாலிபரால் வெளியே குதிக்க முடியவில்லை. அந்த வாலிபரை சுற்றி வளைத்தது. வெட்டுக் கத்தியால் அந்த வாலிபரை சரமாரியாக வெட்டினர். கழுத்தில் வேகமாக வெட்டியதில் தலை துண்டானது.

பயணிகளில் எவரும் அந்த வாலிபரை காப்பற்ற முன்வரவில்லை. பயத்தில் அப்படியே உறைந்து போய் கூச்சல் கூட போட முடியாமல் மவுனமாகி விட்டனர். வாலிபரை தலையை துண்டித்து கொன்ற அந்த கும்பல் எந்தவித பதட்டமும் இன்றி, அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சென்றது.

அதன்பிறகே, பயணிகள் சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :