சிறிலங்காவில் புத்தசிலைக்கு முன் படம் எடுக்காதீர்கள் –பிரித்தானியா

26.8.12


சிறிலங்காவுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் புத்தர் சிலைகளுக்கு முன்னால் ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என்று பிரித்தானிய அரசாங்கம் ஆலோசனைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம், சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய குடிமக்களுக்காக நேற்று விடுத்துள்ள பயண ஆலோசனை அறிவிப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

எனினும் ஏற்கனவே கடந்தவாரம் வெளியிட்ட ஆலோசனை அறிவிப்பில் கூறப்பட்டிருந்த தேசியவாத எழுச்சி, பாலியல் குற்றச்செயல்கள் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

புத்தர் சிலைக்கு முத்தம் கொடுத்தபடி ஒளிப்படம் எடுத்த மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளுக்கு காலி நீதிமன்றம், ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நிலையிலேயே பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

0 கருத்துக்கள் :