யாழ்.வல்லிபுரக்கோவில் இராணுவ காவலரண் மீது கைக்குண்டு வீச்சு.

23.8.12


யாழ். வல்லிபுரக்கோவில் அருகில் இருக்கும் இராணுவ காவலரண் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைக்குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று பகல் இரண்டு மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.துன்னாலை- வல்லை - தொண்டமானாறு B417 வீதியில் இருக்கும் இராணுவ காவலரண் மீதே இந்த கைக்குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.

எனினும் குறிப்பிட்ட குண்டு வெடிக்கவில்லை என இராணுவ தரப்பில் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட சந்தேகநபர்கள் காவலரண் அருகில் இருக்கும் ஒரு பிரபல்ய உணவகத்துக்கு 1:30 மணியளவில் வந்துள்ளனர்.

அங்கு குளிர்பானத்தை வாங்கி குடித்து விட்டு, வெளியில் சிறிது நேரம் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

பின்பு அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் இராணுவ காவலரண் நோக்கி சென்று, காவலரண் மீது கைக்குண்டு வீசியுள்ளனர்.

கைக்குண்டு காவலரண் மீது பட்டு வெளியில் விழுந்து வெடிக்காமல் செயலிழந்துள்ளது.

சற்று நேரம் கழித்து இராணுவத்தினர் வெளியில் வந்து பார்த்து கைக்குண்டை பார்த்துள்ளனர்.

உடனே வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தவாறு குறிப்பிட்ட உணவகம் நோக்கி விரைந்தனர்.

பின்பு அங்கிருந்த ஒரு பிரதேசவாசியை வீதியில் போட்டு சைக்கிள் குழாயால் தாக்கியுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் உணவாக உரிமையாளரின் மைத்துனர் என்றதால் அவர் இராணுவத்தினரை மறிக்க படையினர் அவரையும் தாக்கி அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அழைத்துச்சென்று உள்ளனர்.

கைக்குண்டு வீசப்பட்ட உண்மை எனினும் குறிப்பிட்ட இராணுவ முகாமில் பணிபுரியும் ஒரு இராணுவ வீரருடன் குறிப்பிட்ட நபர் சில நாட்கள் முதல் முறுகலில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகள் கூறினர்.

இதனால் தான் இந்த சம்பவத்துடன் குறிப்பிட்ட அப்பாவியை இராணுவத்தினர் கோர்த்து விட்டுள்ளனர்

0 கருத்துக்கள் :