அரசு பஸ் முகப்பில் வேப்பிலை கட்டி செல்லும் காட்சி

21.8.12


விபத்து நடந்துவிடாமல் பஸ் செல்ல வேண்டும் என்பதற்காக பஸ் முகப்பில் வேப்பிலை கட்டி கொண்டு செல்லும் காட்சி அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து கீரமங்கலம், மேற்பனைக்காடு வழியாக பேராவூரணி வழியாக செல்லும் அரசு பஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதான நிலையில் சென்று கொண்டிருந்த போது மேற்பனைக்காடு காவிரி ஆற்றங்கரை அருகே எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதன் பிறகு சில நாட்கள் மாற்றுப் பேருந்து சென்றது.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு கீரமங்கலம் வந்து கொண்டிருந்த இந்த அரசு பஸ் முகப்பில் வேப்பிலை கட்டப்பட்டிருந்தது. இது குறித்து அந்த பஸ்சில் வந்த பயணிகள் கூறும் போது இந்த பஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்திற்குள்ளானது.

அதனால் மீண்டும் விபத்துகள் நடந்து விடக்கூடாது என்று கோயிலில் தரிசனம் செய்து அங்கிருந்து கொண்டுவரப்பட்ட வேப்பலையை பஸ் முகப்பில் கட்டி வைத்து ஓட்டி செல்கின்றனர் என்றனர். இதை பார்க்கும் பயணிகள் பஸ்சில் ஏற்படும் சிறு பழுதுகளை நீக்கினாலே விபத்துகளை தடுக்கலாம். இந்த வேப்பிலைகள் தேவை இல்லை என்கின்றனர்.

0 கருத்துக்கள் :