ஆட்சியாளர்களே உண்மையான துரோகிகள்: விக்கிரமபாகு

18.8.12


இலங்கையின் வளங்களை சர்வதேச நிறுவனங்களுக்கு விற்றுவருவதனால் நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களை உண்மையில் காட்டிக் கொடுப்பவர்கள் என டாக்டர் விக்ரமபாகு கருணாரத்ன கூறினார்.

அநீதிக்கு எதிரான தேசிய இயக்கத்தின் கூட்டத்தில் பேசுகையிலேயே கருணாரத்ன இவ்வாறு கூறினார்.

சென்னையில் நடந்த தமிழீழ ஆதரவு நிறுவன மாநாட்டுக்கு நான் சென்றதனால் நாட்டின் கௌரவத்தை குறைத்துவிட்டதாக ஜனாதிபதி அண்மையில் கூறியுள்ளார்.

இந்த நாட்டை சர்வதேச நானய நிதியத்துக்கும் உலக வங்கிக்கும் ஈடு வைத்தவர்கள் தான் உண்மையான தேச துரோகிகள் என அவர் கூறினார்.

தமிழ் நாட்டில் தான் பேசியபோது, இந்த அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல, முழு நாடுமே பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டுமெனவும் தான் மாநாட்டில் பேசிய போது கூறியதாக அவர் தெரிவித்தார்.

நான் றுகுணுவை சேர்ந்தவன் என ஜனாதிபதி கூறும்போது றுகுணு என்பதனால் எதை கருதுகின்றாரோ அவ்வாறுதான் வடக்கு கிழக்கு மக்கள் ஈழம் என்னும் சொல்லை பயன்படுத்துகின்றனர். பலர் ஈழம் என்னும் சொல்லை தனி நாட்டை குறிக்க பயன்படுத்தினாலும் அதன் உண்மையான கருத்து அதுவல்ல என அவர் கூறினார்.

தற்போதைய ஆட்சியாளர்களின் காட்டிக் கொடுப்பை பற்றி இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டுமன்றி உலகின் எந்த பகுதியிலும் பேசுவேன்’ என அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :