பணத்துக்காக பெற்றோரும் சகோதரியும் படுகொலை மகன் தலைமறைவு

19.8.12


வெள்ளவத்தை ராமகிருஷ்ணா டெரஸ் வீதியில் நேற்று வீடொன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் மகன் பிரஷான் குமாரசாமி கொட்டகலை வீட்டிற்கு வந்து சென்றதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரண்டு காவல்துறை குழுக்கள் வெவ்வேறாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

வெள்ளவத்தை ராமகிருஷ்ணா டெரஷ் வீதியில் நேற்று வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹட்டன் கொட்டகலையை சேர்நத 58 வயதான குமாரசாமி, அவரது மனைவி பூவதி மற்றும் அவர்களது 23 வயதுடைய மகள் அமிர்தபிரியா ஆகியோரே நேற்றைய தினம் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

அவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அவரது அயல் வீட்டார் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

இவர்கள் மூவரும் கொட்டகலையில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து, அவர்களிம் மூத்த மகன் பிரஷான் குமாரசாமி என்பரால் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

பின்னர் பிரஷான் மீண்டும் தனியாக கொட்டகலை வீட்டிற்கு திரும்பியதாகவும், வீட்டில் சிறிது நேரம் தங்கியிருந்து விட்டு மீண்டும் வெளியேறியதாகவும், அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொட்டகலையில் உள்ள வீட்டை உடைத்து பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் மகன் அங்கு மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வீடு உடைக்கப்பட்டதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, நுவரெலியா காவல்துறையினரும், வெள்ளவத்தை காவல்துறையினரும் முனைப்புடன் தமது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ அதிகாரி அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்..

நேற்று சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தின் மூத்த மகனால் முன்னேஸ்வரம் செல்வதற்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும், கடந்த 3 தினங்களுக்கு முன்னரே அவர்கள் மரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நிதி ரீதியான முறுகல் காரணமாகவே இந்த மகனால் பெற்றொரும், தங்கையும் படுகொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதனிடையே, வாத்துவ – மெலேகம பிரதேசத்தில் ஊந்துருளியில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 44 வயதான பெண்ணொருவர் இன்று மதியம் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

இதுதான் இன்றைய உலகம்நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)