டெசோ மாநாடு : போலீஸ் எச்சரிக்கை

12.8.12

சென்னையில் ராயப்பேட்டையில் நடைபெறவிருந்த டெசோ மாநாட்டிற்கு போலிசார் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து திமுக தலைவர் கலைஞர், மாநாடு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாகன நிறுத்தத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். வாகன நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். உள் அரங்கிற்கு வெளியே ஒலி பெருக்க பயன்படுத்த போலீசார் அனுமதி பெற வேண்டும். கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

0 கருத்துக்கள் :