55,000 குழந்தைகள் மாயம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

16.8.12


சுமார் 55,000 குழந்தைகள் காணாமல் போனது குறித்து பதில் அளிக்குமாகு மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 55,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குழந்தைகளின் நிலை என்னவென்று இதுவரை எந்த விவரமும் இல்லை.

காணாமல் போகும் குழந்தைகள் பற்றி வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த காவல்நிலையங்கள் தவறிவிட்டன என்றும், கடத்திச் செல்லப்படும் குழந்தைகளின் உடல் பாகங்கள் பிடுங்கப்பட்டு அவை பிச்சை எடுக்கும் கொடுமைக்கு உட்படுத்தப்படலாம் அல்லது கடத்தல், விபச்சாரம், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படலாம் என்று பொது நலன் மனுவை தாக்கல் செய்த சர்வ மித்ரா தனது மனுவில் கூறியுள்ளார்.

காணாமல் போன குழந்தைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அப்தாப் அலாம் மத்திய, மாநில அரசுகள் இதன் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

0 கருத்துக்கள் :