யாழ்ப்பாணத்தில் இந்தியர்களை குறிவைத்து தேடுதல்வேட்டை – 53 பேர் கைது

17.8.12


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 53 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களாவர்.இவர்கள் விடுதிகளில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் சோதிடர்கள் என்றும் சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.இவர்கள் அனைவரும் நீர்கொழும்பில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.விரைவில் இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரியவருகிறது.

0 கருத்துக்கள் :