மீண்டும் மீண்டும் இராமாயணம்....

3.2.12


மீண்டும் மீண்டும் இராமாயணம்
கேட்பவர் மனதினை கலங்கிடசெயும்
மீண்டும் மீண்டும் இராமாயணம்

வாலியின் மார்பினில் இராமனின் அம்பு
மறைந்து நின்று கொன்றான் அன்று
வன்னியை வேருடன் அழித்தார் இங்கு
வஞ்சகம் மறுபடி வென்றது இங்கு

மீண்டும் மீண்டும் இராமாயணம்

சீதையின் நெஞ்சில் சிந்தனை இல்லை
இராவணன் மண்ணை அழிப்பதே கொள்கை
கோதையின் பக்கத்தில் இராமன் இன்றில்லை
கோபத்தினாலே பாபத்தை மறந்தாள்

மீண்டும் மீண்டும் இராமாயணம்

துதுவன் கண்ணன் வாயினில் நஞ்சு
சொல்வது ஒன்று செய்வது வேறு
பாரதம் காத்திட இது வழி என்று
பாவிகள் உயிரை பறித்தார் இன்று

மீண்டும் மீண்டும் இராமாயணம்
கேட்பவர் மனதினை கலங்கிடசெயும்
மீண்டும் மீண்டும் இராமாயணம்


.....ஆக்கம்/தம்பிகாந்

0 கருத்துக்கள்: