யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் பட்டப்பகலில் புகுந்த கொள்ளையர்கள், 25 பவுண் நகை மற்றும், பெறுமதியான பொருட்கள் பலவற்றையும் கொள்றையிட்டுச் சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று செவ்வாயன்று, மாலை 3மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் குடும்பத்தினருடன், அருகிலுள்ள கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்றிருந்தனர்.
இவற்றை நன்கு அவதானித்திருந்த, கொள்ளையர்கள் வீட்டின் பின்புறக் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்து, வீட்டிலிருந்த 25 பவுண் நகை, கையடக்கத் தொலைபேசிகள், மற்றும் சில பொருட்கள் கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளன.
எனினும் கோவிலுக்குச் சென்றிருந்த வீட்டின் உரிமையாளர்கள், திரும்பி வந்து பார்த்தபோதே சம்பவம் தெரியவந்துள்ளது.
உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு விடயம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தடயங்களை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
சிறப்புச் செய்திகள்
Labels
வடமராட்சி, துன்னாலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!
22.2.12
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக