
விடுதலைப் புலிகளால் பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உள்ளிட்ட மூன்று அரசியல் கட்சிகளின் பதிவுகளை சிறிலங்கா தேர்தல் திணைக்களம் நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எம்.எச்.எம்.அஸ்ரப் உருவாக்கிய தேசிய ஐக்கிய முன்னணி, விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் ஈ.என்.டி.எல்.எவ் எனப்படும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பதிவுகளையே சிறிலங்கா தேர்தல் திணைக்களம் இன்று நீக்கம் செய்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பதிவுகளை பேணுவதற்கு ஆண்டுதோறும் வருடாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களைக் கையளிக்காமையினாலேயே இந்தக் கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
புதிய தேர்தல் சட்டத்தின் படி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆண்டுதோறும் கணக்கறிக்கையை தேர்தல் திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
1989ம் ஆண்டு விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணியின் தலைவராக மாத்தையா எனப்படும் கோ.மகேந்திரராசாவும், பொதுச்செயலராக யோ.யோகியும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
சிறப்புச் செய்திகள்
Labels
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கட்சி பதிவு நீக்கம்.
1.2.12
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக