கிளாலி மேற்கில் மணல் கொள்ளை: பாதுகாக்க முடியாது மக்கள்..

3.2.12


மக்கள் மீழ் குடியேற அனுமதிக்கப்படாத கிளாலி மேற்கு, தரவை தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் இருந்து களவாக வாகனங்களில் தினமும் பெருமளவில் மணல் கடத்திச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.

காணி உரிமையாளர்கள் காணியைச் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டாலும் மீளக்குடியமர இன்னும் அனுமதிக்கப்படாததால் அவர்களால் மணல் கொள்ளையைத் தடுக்கவோ தமது காணிகளை பாதுகாக்கவோ முடியவில்லை.

தாம் காணிகளுக்குச் சென்று திரும்பிய பின்னர் சில நபர்கள் காணிகளுக்குள் புகுந்து மணல் ஏற்றிச் செல்வதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள படை முகாமில் அறிவித்தும் பயன் ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள்: