யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியருக்கு கிடைத்த விருது

2.2.12


இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வ தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவா்களைக் கௌரவப்படுத்தும் முகமாக “V Awards ” விருதுவழங்கும் வைபவம் இரத்மலானையில் கடந்த வாரம் இடம்பெற்றது.ஜக்கிய நாடுகள் சபையினால் சா்வதேச தன்னார்வ தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு மேற்படி விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மற்றவர்களின் நலனுக்காக பங்காற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை இவ்விருதுக்காக இணைத்துக்கொண்டார்கள்.

இந்த மிகப்பிரமாண்டமான நிகழ்வுக்கு வந்து குவிந்திருந்த விண்ணப்பப்படிவங்கள் அனைத்தும் எந்தவித ஜாதி மத இன பேதமும் இன்றி நடுநிலையாக கவனிக்கப்பட்டன. அத்துடன் போட்டியாளர்களினது தனித்திறமைகள் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அற்பணிப்புகள் அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாக அக்குவேறு ஆணிவேறாக பார்க்கப்பட்டன.

பங்குபற்றிய அத்தனை தொண்டர்களுக்குள்ளும் 26 தன்னார்வ தொண்டர்கள் நடுவர்களினால் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவுசெய்யப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டதுடன், இறுதிநிகழ்வு Stain Studioஇல் கடந்த வாரம் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்ப்பதற்காக யேர்மனியில் இருந்து Flavia Pansieri ( EXECUTIVE COORDINATOR UNITED NATIONS VOLUNTEERS ) கலந்துகொண்டார்.

இறுதியாக 15 தன்னார்வ தொண்டர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுள் முதலாவதாக Dr. சின்னையா தேவானந்தன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் தெரிவுசெய்யப்பட்டு V அவார்ட் பெற்றுக்கொண்டார்.

Autism எனும் தன்மை கொண்ட பிள்ளைகளை இவர் கையாளும் தன்மை முற்றிலும் வேறுபட்டது. அப்பிள்ளைகளும் சமுதாயத்தில் ஒரு சராசரியான மனிதனாக வரவேண்டும் என்று அரும்பாடு படுகிறார்

0 கருத்துக்கள்: