விஜயகாந்த் அதிரடி : ஜெயலலிதாவிற்கு 3 நிபந்தனைகள்

17.3.11


அதிமுக கூட்டணியில் தொடர தேமுதிக 3 நிபந்தனைகள் விதித்துள்ளது. தொகுதி பங்கீட்டு பிரச்சனையால் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னனி கழகம் சேதுராமன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து 3வது அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இதையடுத்து தேமுதிக அதிமுகவிற்கு 3 நிபந்தனைகள் விதித்துள்ளது.



1. அதிமுக அணியில் மதிமுகவிற்கு இடம் அளிக்க வேண்டும்



2. அதிமுக வேட்பாளர் அறிவித்துள்ள 21 தொகுதிகளை தேமுதிகவுக்கு தரவேண்டும்



3. தேமுதிகவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட வேண்டும்

0 கருத்துக்கள்: