இலங்கையில் புலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது: டக்ளஸ் தேவானந்தா

7.2.11

இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.”இலங்கையில் விடுதலைப் புலிகளால் இனி வெளிப்படையாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ செயல்பட முடியாது என்று நான் உறுதியாக நம்பவில்லை. வடக்குப் பகுதியில் அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.” என்று அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அரசியல் கட்சிகள் மூலமாகவும் புலிகள் தங்கள் பலத்தை காட்ட முயற்சி செய்யலாம் என்றும் டக்ளஸ் கூறியதாக அந்த இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :