தமிழ்நாட்டில் பிரபாகரன் படம் விற்பது குற்றமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

2.9.10

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெரியார் திராவிடக்கழக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல்லடத்தைச்சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புத்தகங்களையும், படங்களையும் விற்றார். அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படமும் இருந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் சட்டவிரோத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘’நான் பிரபாகரனின் படத்தை விற்றதால் தீவிரவாதி அல்ல. எந்த குற்ற எண்ணத்துடனும் நான் செயல்படவில்லை. என் மீது வழக்கு போடப்பட்டது தவறு. அதை ரத்து செய்ய வேண்டும்’’என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. சுப்பிரமணி சார்பில் வக்கீல்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் வாதிட்டனர்.தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தார்மீது ஆதரவு அளிப்பது குற்றம் ஆகாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, பிரபாகரன் படத்தை விற்றதில் எந்த தவறும் இல்லை. எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று இரு வக்கீல்களூ,ம் கூறினர்.இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
(நன்றி ,நக்கீரன் )

0 கருத்துக்கள்: