வைகோ மீதான இறையாண்மைக்கு எதிராக பேச்சு வழக்கு தள்ளிவைப்பு.

6.9.10

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வைகோ சிவகங்கை சென்று இருப்பதால் அவரது வழக்கறிஞரின் மனுவை நீதிபதி பூபாலன் ஏற்றுக் கொண்டு வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் ம.தி.மு.க. சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், மு.கண்ணப்பனும் பேசினார்கள். அப்போது இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி பூபாலன் முன்பு வந்தது. அப்போது வைகோ தரப்பில் வக்கீல் தேவதாஸ் ஆஜரானார்.
நிகழ்ச்சியில் பங்கேற்க வைகோ சிவகங்கை சென்று இருப்பதால் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்குமாறு மனுதாக்கல் செய்தார். இதை நீதிபதி பூபாலன் ஏற்றுக் கொண்டு வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 25-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

0 கருத்துக்கள்: